Nakkheeran Home தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
நச்சரிக்கும் பெண் செய்தி வாசிப்பாளர்

பெரிய திரையில் தலைகாட்டும் பெண் செய்திவாசிப்பாளர் இவர். இவரின் நச்சரிப்பு அந்த தொலைக்காட்சியில் தாங்க முடியவில்லையாம். இதுவெல்லாம் ஒரு செய்தியா. உங்கள் கட்சியின் தொலைக்காட்சி என்பதற்காக, இவ்வளவு பெரிய அறிக்கையை எப்படி வாசிப்பது என ஏளனமாக பேசி இம்சித்து வருகிறார். இவரது இம்சை தாங்க முடியாமல் ஊழியர்கள் புலம்பிய படி திரிகிறார்கள். அந்த தொலைக்காட்சி நிர்வாகி ஒருவரின் ஆதரவு இருப்பதால்தான் இப்படி ரகளை செய்து வருகிறாராம் அந்த அம்மா.

நடிகருடன் டைரக்டர் மனைவி ஸ்டார் ஹோட்டலில் ஆலோசனை

முதல் படத்தில் தன்னுடன் நாயகியாக நடித்தவரை, தனக்கு வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டவரும், பின்னர் சில பல காரணங்களால் தற்போது மனைவியை பிரிந்து வாழ்பவரும், புதுமைக்கு பெயர் போன நடிகரும், இயக்குனருமான இவர் தற்போது வல்லமை வேண்டி ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் புதுமைக்கு அளவே இருக்காது. இதற்கு இவர் சமீபமாக நடத்திய நிகழ்ச்சியே உதாரணம். இவரை ஒரு புதுமைப்பித்தன் என்று கூட சொல்லலாம். இவரும் சுகமான நடிகையும் (மணிமணியாக படம் படைக்கும் இயக்குனரின் மனைவி) அவ்வப்போது, தங்களது படங்களை பற்றி மனம் திறந்து பகிர்ந்துகொள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு செல்கிறார்களாம். ஆனால் இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தித்துக் கொள்வதில்லை. இதற்கு ஆதாரம் புதுமை விரும்பி அண்மையில் வல்லமை கேட்டு நடத்திய படதுவக்க விழாவில் கூட காவடி தூக்கி தேசிய விருது வாங்கிய அந்த நடிகை வரவில்லை. ''நான் எவ்வளவு அழைத்தும் அவர் வரமறுத்துவிட்டார்'' என்று புதுமை விரும்பி தன் வேதனையை அனைவரிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

டி.வி.நடிகையின் வருத்தம்

ஏ.வி.எம். தயாரித்து வரும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ஜான் சீரியல் நடிகை, அக்கா, அம்மா வேஷம் கட்டி வருகிறார். இப்ப இருக்கிற காலத்துல ஆண் துணையில்லாம வாழ முடியாதுன்னு, தன்னுடைய வீட்டில் ஒரு துணைவருடன் வாழ்ந்து வந்தார். துணை நடிகைக்கு, துணையாக இருந்து ஆதரவு தந்தவரோ, திடீரென வீட்டிலுள்ள பணம், நகைகள் உட்பட எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியான ஜான் நடிகை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்ற போலீசார் அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்ப்பு, எத்தனை வருட பழக்கம் என்று கேட்டுள்ளனர். இந்த செய்தி காட்டு தீ போல பரவி, தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் அனைவரும் ஜான் நடிகையை அப்படி விசாரிக்கிறார்களாம். இதை ஏன் போலீசில் சொன்னோம் என்று இப்போது வருத்தப்படுகிறாராம் ஜான் நடிகை.

மனைவியை மதிக்கும் டைரக்டர்கள்

குஷ் நடிகையை அவருடைய டைரக்டர் கணவர், மேடம் என்று அன்பு கலந்து செல்லமாக அழைக்கிறார். இதேபோல 'தேவ' நடிகையை, அவருடைய கணவர் ''வாங்கம்மா... போங்கம்மா'' என்றுதான் அழைக்கிறார். ஏனென்றால் இரு நடிகைகளுக்குமே சின்னத்திரையில் வருமானம் அதிகமாம்.

சோகப்பாடல் பாடும் நடிகை

மீன் போன்ற கண்களையும், தேன் போன்ற குரலையும் கொண்ட அந்த இரண்டெழுத்து நடிகைக்கு எதிராக யாரோ திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் (திருணம் ஆகிவிட்டதென்று). நான் யார் வம்புக்கும் போகாத நிலையில், என்னைப் பற்றி வதந்தி பரப்ப, அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருதோ?.... என்று சோகப் பாடல் பாடுகிறார் அம்மணி.

சந்தோஷபாடல் பாடும் ரோஸ் நாயகி

செல்வமான டைரக்டரை காதல் மணம் புரிந்து இரண்டு குழந்தைகளுக்கும் தாயகிவிட்ட ரோஸ் நடிகை, அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். (அதிலும் முக்கியமான மகளிர் அணி பொறுப்பில் இருக்கிறாராம்) சினிமா, அரசியல் இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்பவர்களிடம், சினிமா பாதி.... அரசியல் பாதி... என்று ராகம் போட்டு சொல்கிறார் செம்பருத்தி ரோஸ் நடிகை.