தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

''1977'' ஒரு பார்வை

ஆர்.எஸ்.கே. பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தயாரிப்பு நிறுவத்தை துவக்கி உள்ளார் நடிகர் சரத்குமார். இதன் முதல் தயாரிப்பாக ''1977'' என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை தினேஷ்குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நமீதாவும், பர்சானா என்ற புதுமுகமும் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசையில், கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். சரத்குமார் இப்படத்தில் ஆறு வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் மலாக்கா, லங்காவி, புத்ரஜெயா, பத்துமலை போன்ற இடங்களில் நடத்தப்பட்டது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மலேசியா போலீஸ் அதிகாரிகள் 200 பேர், போலீஸ் வாகனத்தில் வருதும் படமாக்கப்பட்டுள்ளது. மலேசிய நடிகர் யாங்காசிம் வில்லனாக நடிக்கும் இப்படம் மலாய் மற்றும் சைனிஸ் மொழிகளில் டப் செய்யப்படுகிறது. படத்தில் விவேக் ஜோடியாக சீன நடிகை கோரல் வூ என்ற நடிகை அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், சொந்த தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என்று இருந்த என்னை இப்படத்தின் கதை தயாரிப்பு பணியில் மீண்டும் ஈடுபடுத்தி உள்ளது. ''1977'' படம் எனது திரை வாழ்வில் முக்கிய பாடமாக இருக்கும். அரசியலையும், சினிமாவையும் எப்போதுமே ஒன்றாக நான் பார்ப்பவன் அல்ல.

இப்படத்தில் தந்தை, மகன் என்ற இருவேடங்களில் நடிக்கிறேன். இதுபோன்று இரட்டை வேடங்களில் நான் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இப்படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். மலேசியாவில் நûபெற்ற படப்பிடிப்பின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விடுபட்டு போன காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. மலேசியாவில் மிக உயரமான ட்வின் டவர் அருகே 50வது மாடி ஒன்றில் ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நிஜமாகவே ஹெலிகாப்டரிலிருந்து குதித்து கண்ணாடியை உடைத்துக்கொண்டு தரையில் விழுந்து புரண்டது மறக்க முடியாத அனுபவம் என்றார். ஜூன் அல்லது என பிறந்த நாளான ஜூலை 14 அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான், இப்படத்தில் அரசியலை புகுத்தவில்லை என்றார்.