தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

தங்கம்- திரைவிமர்சனம்

தங்கச்சி மேல் பாசமோ பாசம் வைத்து திரியும் அதே 'பாசமலர்' சென்டிமெண்டை ரிபீட் அடித்திருக்கும் படம் 'தங்கம்'. சத்யராஜ் கவுண்டமணியின் காமெடி கூட்டணியால் ரொம்பவே கலகலக்க வைத்திருக்கிறது.

ஊரே மதிக்கும் பட்டு கரை வேட்டி கட்டிய ஒரு ஹீரோ (சத்யராஜ்). அவருக்கு ஒரு தங்கை (ஜெயஸ்ரீ), கூடவே கலகல சிரிப்புக்கு ஒரு கல்யாணமாகாத தாய்மாமன் (கவுண்டமணி) . இவனைப் பார்த்து பொறாமைப்படும் அரசியல் வாதியாக ஒரு வில்லன். ஹீரோவை பழிவாங்குவதாக நினைத்து ஹீரோவின் தங்கச்சியை கற்பழித்துவிடுகிறான். கற்பழித்தவனுக்கே தன் தங்கச்சியைக் கட்டி வைக்கிறார் ஹீரோ. பின் தங்கச்சியின் நலனைக் கருதி வில்லனின் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்குப் போகிறார் ஹீரோ. ஹீரோ விடுதலையாகி வெளியே வந்து பார்த்தால் தங்கை கொலைசெய்யப் பட்டிருக்கிறாள். கொலை செய்த வில்லனை பழிவாங்குகிறார் ஹீரோ.

வழக்கமான தமிழ் சினிமா பார்முலாதான். இதற்கு நடுவில் கவுண்டரின் ஜாலி காமெடி, சத்யராஜ்/மேக்னா நாயரின் ரோமான்ஸ் டூயட், நாலு பைட்டு, ரெண்டு குத்துப்பாட்டு, என திரைக்கதை அமைத்து தப்பித்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஜி.கிச்சா.

மீண்டும் அதே எனர்ஜியோடு நக்கல் அடிக்கிறார் கவுண்டமணி..... தனக்கு நிகராக மற்றவர்களையும் பேச வைத்து மகிழ்விப்பதில் சத்யராஜிக்கு நிகராக சத்யராஜ் தான். சத்யராஜ் கட்சி துவங்க நினைப்பதும், அதற்கு வா.ப.கா.க. அப்படின்னா, 'வாழப்பழ காமெடி கட்சி' என்று பெயர் வைத்துக்கொள் என்று கவுண்டமணி சொல்வதும். கட்சி பேர் கேவலமாக இருக்கிறதே என்று சத்யராஜ் சொல்ல, இதைவிட கேவலமான கட்சி பெயர்களெல்லாம் இருக்கிறது என்று கவுண்டர் சொல்லுவதும், இந்தா என் துண்டை உன் கட்சி கொடியாக வைத்து ஊரையே நாரடி என்று கவுண்டர் அடிக்கும் கமெண்ட் வயறு குலுங்க சிரிக்க வைப்பது ரகளையோ ரகளை!

மேக்னா நாயர் சில ஃப்ரேம்களில் மட்டும் அழகாய் தெரிகிறார், மற்றபடி ரசிக்கும்படியாக எதுவும் இல்லை. தங்கையாக வரும் ஜெயஸ்ரீ மனத்தில் நிற்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பரவாயில்லை ரகம். சீரியசாக நம்மை தன் நடிப்பால் நெகிழவைத்து வந்த சத்யராஜ், தங்கமாக ரிலாக்சாகி மீண்டும் ளொள்ளு ரகளை செய்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். ( நல்ல விஷயம் தானே! )