சந்தோஷ் சுப்ரமணியம ---- திரை விமர்சனம்

ரீமேக் செய்வதில், தான் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா.
ரவி, ராஜா கூட்டணி கொடுத்திருக்கும் நான்காவது வெற்றி.
உச்சஸ்தாயில் பேசும் வசனங்கள், கமர்ஷியல் என்ற பெயரில் சேர்க்கப்படும் கவர்ச்சியாட்டங்கள்,
தமிழ் சினிமாவின் வழக்கமான வேட்டி கட்டிய வில்லன் இவைகளையெல்லாம்
மூட்டைக்கட்டி வைத்து விட்டு குடும்பம், காதல், நட்பு என பயணிக்கிறது கதை.
ஜெயம் ரவியைய் விட்டால் தமிழ் சினிமாவின் இளைய நாயகர்களில் இந்த கதைக்கு பொருந்துபவர்கள்
யாரும் இல்லை.
அப்பா பிரகாஷ்ராஜ், மகனாக ஜெயம் ரவி.
மேலாடை முதல் உள்ளாடை தேர்வு செய்வது வரை அப்பாவின் (சுப்ரமணியம்) விருப்பம் போலவே
நடந்து கொள்கிறார் ஜெயம் ரவி (சந்தோஷ்).
அப்பாவின் அளவுகடந்த பாசத்தில் அடக்கி வாசிக்கிறார் ஜெயம் ரவி.
ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மனைவியையும் பிரகாஷ்ராஜே தேர்வு செய்துவிடுகிறார்.
அதிர்ந்து போகும் ஜெயம் ரவி அப்பாவின் அன்பு கட்டளையால் திருமணத்திற்கு சம்மதம்
தெரிவித்துவிட்டாலும் வெளியில் ஜெனிலியாவோடு டூயட் பாடி வருகிறார். இந்த காதல்
சங்கதி தந்தைக்கு தெரியவர, பூந்தோட்டத்தில் புயல் அடித்த மாதிரி வெடித்து சிதருகிறது வீடு.
வேறென்ன... க்ளைமேக்ஸில் சுபம் தான்.
ஜெயம் ரவி நண்பர்களோடு நடத்தும் சரக்கு சந்திப்புகள் கலகல கலாட்டா என்றால்,
வீட்டிற்குள
் அப்பாவிடம் பம்புவது அதைவிட சூப்பர். ஒவ்வொரு ப்ரேமிலும் ஜெயம்
ரவி வண்டி வண்டியாய் நடித்துத் தள்ளுகிறார். கண்டிப்பான அன்போடு இருந்து வரும் அப்பா கேரக்டருக்கு
பிரகாஷ்ராஜை விட்டால் வேற யாரு இருக்கா? ஆனால் க்ளைமேக்ஸ் காட்சியில் வசனங்களால் வெடிக்கும் ஜெயம் ரவி
பிரகாஷ்ராஜ் என்ற நடிப்பு யானையைத் தன் நடிப்பால் விழுங்கி இருக்கிறார்.
நடிப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ஜெனிலியா அதுவும் எறும்புகதை சொல்லும் காட்சி அழகோ அழகு, பாவம் சடகோப்பன்
ரமேஷ்தான் டக் ஆகிவிட்டார் (பர்ஸ்ட் டைம் என்பதனாலோ என்னவோ). சந்தானம் பேசும் காமெடி வசனங்களுக்கு கைதட்டல் சத்தம் பலே! பலே!
தேவி ஸ்ரீபிரசாதின் இசை ம்ம்..... தெலுங்கில் ஹிட்டான அதே மெட்டுகளை தமிழிலும் சூப்பர் ஹிட்டாக்கி இருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்.
ரீமேக் செய்வதில், ராஜா ராஜாதான்! ராஜாவின் ரீமேக் ராஜாங்கம் தொடரட்டுங்கோ...