தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

நேபாளி- திரைவிமர்சனம்

இயக்குநர் துரை என்றதுமே எதிர்ப்பார்புகள் அதிகரிக்க, எதிர்பார்த்தவர்கள் ஏமாறாமல் இருக்கும்படி ஒரு வித்தியாசமான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் துரை.

முதல் முறையாக பரத் மூன்று வேடங்கள் ஏற்றிருக்கிறார். கதாப்பாத்திரத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. நேபாளியாக வரும் பரத் டி.நகர் சங்கரபாண்டியன் ஸ்டோர்சில் வேலை செய்கிறார். வீடு வீடாக சென்று பொருட்களை டோர்டெலிவரி செய்யும் இவர் இளம் பெண்களை உடலுறவிற்காய் கட்டாயப்படுத்தும் குடும்ப ஆண்களை கொலை செய்து வருகிறார். போலீஸுக்கு தெரிவித்துவிட்டே கொலை செய்துவருகிறார். போலீஸ் எவ்வளவு முயற்சி செய்தும் அவர் செய்யும் கொலைகளை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் போலீஸ் அவரைத் தீவிரமாக தேடிவருகிறது....

ஓ... ஓ... ( பேக்ரவுண்டு மியூசிக் மா )

இப்படியிருக்க ஊட்டி மலைப் பிரதேசத்திற்கு களம் மாறுகிறது கதை, அங்கே பாப் பாடல் பாடி எண்ட்ரீ கொடுக்கும் ஐ.டி மாணவராக பரத். பரத்திற்கும் மீரா ஜாஸ்மினுக்கும் ஒரு துப்பட்டா சந்திப்பில் காதல் ஏற்படுகிறது. வழக்கம்போல தமிழ் சினிமாவின் பெற்றோர்கள் இவர்கள் காதலையும் எதிர்கிறார்கள். பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துக்கொள்ளும் இவர்கள் வாழ்க்கையில் வில்லனாக ஒரு போலீஸ்காரர் நுழைகிறார். மீரா ஜாஸ்மினை உடலுறவிற்காக போலீஸ்காரர் கட்டாயப்படுத்த, மீரா ஜாஸ்மின் தற்கொலை செய்து கொள்கிறார். கொலைப் பழி பரத் மீது விழுகிறது... இது இப்படி இருக்க...

ஓ... ஓ... ( அதே பேக்ரவுண்டு மியூசிக் )

சிறைக்குள் காட்டப்படும் மூன்றாவது பரத், எப்போதும் தற்கொலைக்கு முயற்சி செய்து, முயற்சி செய்து தோற்று போகிறார். சிறைக்குள் நேபாளி ஒருவரின் அறிமுகம் இவருக்குக் கிடைக்கிறது, சில பகையால் நேபாளியைக் கொன்றுவிடுகிறார் போலீஸ் அதிகாரி, பின் பெண் கைதிகளை கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துக்கொள்ளும் அந்த போலீஸ் அதிகாரியை போட்டுத் தள்ளுகிறார் பரத்...

ஓ... ஓ... ( அதே அதே பேக்ரவுண்டு மியூசிக் )

இறுதியில் ஐ.டி மாணவராக இருந்த பரத் தான், மனைவின் கொலைப்பழி சுமத்தப்பட்டு, சிறைக்கு சென்று பின் வெளியே வந்து நேபாளி வேஷம் போட்டு கொலைகள் செய்து வருகிறார் என்பது புரிந்து விடுகிறது. இதை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை.

கொஞ்சம் குழப்புகிற கதைதான், இருந்தாலும் தெளிவான ஒரு க்ளைமேக்ஸ் காட்சியால் புருவங்களை நிமிர்த்தி வைக்கிறது இயக்குநரின் சிந்தனை. புது முறையான கொலைகளை அறிமுகப்படுத்தும் இயக்குநர், இருதயத்தையும் நுரைலையும் கிராபிக்ஸில் காட்டுவது திகில்.

ஊட்டி குளுரில் பரத், மீராஜாஸ்மின் கொண்டாடும் முதல் பகல் இளசுகளுக்கு வைக்கப்படும் திரை விருந்து. இருந்தாலும் பரத், சங்கீதாவிடம் விரல் காட்டிப் பேசுவது கொஞ்சம் ஓவர். வேசியைக் கூட இஷ்டம் இல்லாம தொடக்கூடாதுன்னு சொல்லுவாங்க... அவள் என் தேவதை டா... என்கிற வசனம் உருக்கம். தான் ஒரு நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மீரா. நிறைய மறைமுகமான யுக்திகளை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சிறையில் சந்திக்கும் பரத்தும் நேபாளியும் பேசிக்கொள்ள முடியாமல் முதுகில் எழுதி உரையாடுவது வியப்பு. நேபாளியாக வரும் பரத் வசன உச்சரிப்பில் நேபாளியாகவே மாறியிருக்கிறார். நேபாளி பரத் தன் மேக்கப்பைக் கலைத்து போடும்போது இவ்வளவு மேக்கப் செட்டோடவா பரத் சங்கரபாண்டியன் ஸ்டோர்சில் வேலை செய்தார் என்று கேள்வி எழும்புகிறது.. .(லாஜிக் மிஸ்ஸிங்)

பாடல்களை கதையோடு பொருத்தியிருப்பது அழகு, முதல் பாடல் அளவுக்கு அதிகமான தலைசுற்றல், ஸ்ரீகாந்த் தேவா இது ? என்கிற அளவுக்கு வியப்பைக் கொடுக்கிறது பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கசியும் 'வேடனைப் போல நான் மாறவா?' என்கிற பாடல். மதியின் ஒளிப்பதிவு நிறைவு