தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

சர்ச்சைகளைக் கிளப்பியும் சர்ச்சைகளைக் கிளப்புவதற்காகவும் வெளிவந்திருக்கிறது 'மிருகம்'. ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவர வேண்டிய திரைப்படம், தாமதமாய் வந்திருக்கிறது. 'உயிர்' படத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாமியின் இன்னொரு படம். சமுதாயத்துக்கு அவசியமான, தேவையான கருத்தைத்தான் இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார் சாமி. இதே போன்ற கருத்துக்களை இயக்குநர் சாமி "உட்கார்ந்து யோசிப்பாறோ!?"

'எய்ட்ஸ்' நோயைப் பற்றி எத்தனைப் பேருக்கு உண்மையான விபரம் தெரியும். அதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் நம்மில் எத்தனைப் பேருக்கு இருக்கிறது? இந்த அவசியத்தை நமக்கு உணர வைக்கும் திரைப்படமே இந்த 'மிருகம்'.

ராமனாதபுரம் அருகில் சின்ன கிராம்...... எண்ணிப்பார்த்தால் 60 குடிசைகள்தான் இருக்கும். மிருகத்தை காட்டில் பார்க்கலாம் அதையே வீட்டில் பார்த்தால்....? அவன்தான் கதையின் நாயகன் அய்யனாரு (புதுமுகம் ஆதி). பொலிரிக்காளையை வைத்து தொழில் செய்து வருகிறான் இந்த முரட்டுக்காளை. தன் தாயையே விரட்டிச் சென்று காலால் உதைத்து சரமாரியாக அடிக்கிறான். தன்னுடைய முரட்டுத்தனத்தாலும், அடாவடித்தனத்தாலும் ஊருக்குள் ரகளைகள் செய்து வருகிறான். பொரிலிக்காளையின் புத்தியே இவனுக்கும் இருக்கிறது. ஆசைப்படும் பெண்கள் அத்தனைப்பேரோடும் தவறாக உறவு வைத்துக் கொள்கிறான். போதையில் பிச்சைக்காரியிடம் கூட.......

இவனுக்கு திருமணமாகிறது. அழகம்மா (பத்மப்பிரியா) என்ற பெண்னைத் திருமணம் செய்கிறான். அழகம்மா ஆட்டுக்குக் காயடிப்பாள், பனைமரம் ஏருவாள்...... அய்யனாருக்கு ஏற்ற முரட்டுப்பெண். அய்யனாரு முதலிரிரவையும் முரட்டுத்தனமாகவே மேற்கொள்கிறான். ஒரு கட்டத்தில் கைத்து செய்யப்படுகிறான். சிறையில் சக கைதிகளிடமிருந்து கஞ்சா, போதை ஊசி போன்ற பழக்கங்களைக் கற்றுக் கொள்கிறான். போதையில் ஓரினச்சேர்க்கை வரை இவன் அட்டகாசம் நீள்கிறது.

'கடவுள் இருக்கிறான்.... கடவுள் இருக்கிறான்....' என்ற எச்சரிக்கை மணி படத்தில் அவ்வப்போது ஒரித்துக் கொண்டே இருக்கிறது.

அட்டகாசங்கள் செய்து வந்தவன் கொஞ்சம் கொஞ்சமாய் நோய்வாய்ப்படுகிறான். இதுதான் என யூகிக்க முடியாத நோயால் பாதிக்கப் படுகிறான். பின் அதற்குப் பெயர் 'எய்ட்ஸ்' எனத் தெரியவருகிறது. மிருகமாய் திரித்து வந்தவன் புழுவாய் மாறுகிறான். இவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது? சமுதாயம் இவனை ஏற்றுக் கொள்கிறதா? என்பதே முடிவு.

புதுமுகம் ஆதி கதைக்குப் பொருத்தம். பத்மப்பிரியாவின் நடிப்பு இந்த படைப்புக்கு கிடைத்த சிறப்பு. க்ளைமாக்ஸ் காட்சியில் மழையில் நனைத்தபடி வசனம் பேசி இதயங்களை நனைத்து விடுகிறார் பத்மப்பிரியா. கஞ்சாகருப்பின் செய்கைகள் சில இடங்களில் சிரிப்பு, சில இடங்களில் சலிரிப்பு.

காட்சியமைப்புகளில் இருந்த எதார்த்தம் வசன உரையாடல்களில் இல்லை. எதார்த்தம் என்ற பெயரில் சில.....பல முகம் சுளிக்கும் காட்சிகளை வேறு விதமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். கிராமத்தில் உள்ள வேசிகளை வைத்து கவர்ச்சியாட்டம் கட்டியிருப்பது பாடல்களில் ஒன்றை கூட்டியிருக்கிறதே தவிர கதையோடு பொருந்தவில்லை. இது போன்ற படங்களுக்கு இந்த இசை போதாது. கேட்கும் போது நன்றாக இருந்தாலும், இசையில் புதுமை இல்லை. ‘தெய்வங்கள் எங்கே...? தர்மங்கள் எங்கே...?’ வரிகளில் நா. முத்துக்குமார் வெளிச்சமாகிறார்.

சொல்ரியிருக்கும் செய்தியை இன்னும் கொஞ்சம் உரக்கச் சொல்ரியிருக்கலாம். இயக்குநர் சாமியின் முயற்சிக்குப் பாராட்டுகள்.


'மிருகம்' .... விழிப்பு / அவசியமான எச்சரிக்கை.