தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

கல்லூரி - ஒரு பார்வை



சைட்டடிப்போம், தம்மடிப்போம் என்ற ஆரவாரங்களுக்கு மத்தியில் பூத்திருக்கும் ஆவாரம் பூ 'கல்லூரி'. காதல் படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி சக்திவேரின் இன்னொரு கலைச்சிற்பம். இதிலும் ஒரு உண்மைச் சம்பவத்தை உயிரோவியமாய் திரையில் உலவ விட்டுருக்கிறார்.

முத்து, ரமேஷ், அய்யனார், காமாட்சி, ஆல்பர்ட், கயல்விழி, ஆதி லஷ்மி, நாகராணி, சல்மா......பள்ளி நண்பர்களான இவர்கள் கல்லூரியிலும் ஒரே வகுப்பில் சேர்ந்துவிடுகிறார்கள். சில காரணங்களுக்காக அதே வகுப்பில் சேர்பவர் ஷோபனா. வசததிக்கு குறை இல்லாதவர் ஷோபனா. தன் தாயை இழந்த சோகத்தில் வகுப்பில் மற்ற மாணவர்களிடம் பேச மறுக்கிறார். ஒரு நாள் கல்லூரியில் ஷோபனாவை ராகிங் செய்கிறார்கள். ராகிங் செய்யும் சீனியரிடமிருந்து ஷோபனாவை முத்துவும் அவன் நண்பர்களும் விடுவிக்கிரார்கள். தன்னுடைய வாழ்க்கையில் இருப்பது போலவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருப்பது தெரிய வருகிறது. இணை பிரியாத நண்பர்களுக்குள் ஒருவராய் பிரியமுடியாமல் இணைந்து விடுகிறார் ஷோபனா.

விளையாட்டு வீரன் முத்துவிற்கும் ஷோபானாவிற்கும் உள்ள நட்புமொட்டு காதலாய் மலர்கிறது. (வழக்கம் போல) "காதலை சொன்னால் நட்பு களங்கமாகி விடுமோ?" என்ற தயக்கத்தில், காதலை மறைத்து வைத்து வருகிறார்கள். காதலை சொன்னார்களா? இல்லையா? இவர்களின் காதலை இவர்களின் நண்பர்கள் ஏற்றுக்கொண்டார்களா? என்பதை சொல்கின்றன மீதம் இருக்கும் காட்சிகள். சில காட்சிகள் நகராமல் நகர்த்தப்பட்டிருப்ட்டிருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கைக்குட்டை அவசியம்.

அகில்... பாலாஜி சக்திவரின் நல்ல தேர்வு. திரையில் தமண்னாவை தவிற மற்ற அணைவரும் புது முகங்கள். நல்ல வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திருக்கிறார் தமண்னா. 'காதல்' சந்தியவை போல இவரையும் கல்லூரி தமண்னா என்று அழைக்கப்போவது நிச்சயம். முத்துவின் தங்கையாக வரும் சிறுமி, இதயத்தில் பதிகிற அச்சு. முத்து லி ஷோபானாவின் காதலை ஏற்றுக்கொண்டு, கயல் உணர்ச்சி வசப்படும் காட்சியில் கைதட்டல்கள் அவசியம்.

ஜோஷ்வா ஸ்ரீதர், 'காதல்' படத்திற்குப் பிறகு பெரிய அளவில் பேசப்பாடாமல் போனவர். காட்சிகளுக்கு பொருத்தமான இசையைக் கோர்த்த்திருக்கிறார். முதல் பாடலை பழையப் பாடல்களைச் சேர்த்து இயல்பாகவே அமைத்திருப்பது அழகு. நா. முத்துக்குமாரின் வரிகள் வழக்கம் போல சுகம்! ஹரிச்சரண் குரரில் கசியும் 'சரியா இது தவறா..' பாடல், இதயத்தை நனைக்கும் காதல் மழை! இருந்தாலும் 'உன் பார்வையில் ஓராயிரம்.....' என்று ஒலிக்கும் இளையராஜாவின் பாடரிலில் இருக்கும் சுகம் மற்றப் பாடல்களில் இல்லை. செழியனின் ஒளிப்பதிவு படத்திற்க்கும், பார்க்கும் கண்களுக்கும் செழிப்பு. காதலைத் தொடர்ந்து கல்லூரியிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.


கல்லூரி - முதல் பெஞ்சு மாணவர்கள் !