தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

அறை எண் 305தில் கடவுள்- திரைவிமர்சனம்

காதில் பூ சுற்றுகிற கதைதான் என்றாலும் ஒரு வித்தியாசமான படைப்பாக 'அறை எண் 305தில் கடவுள்' இருக்கிறது. திருவல்லிக்கேணியிலுள்ள கருப்பையா மேன்ஷனுக்கு கடவுள் வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே கதை... கதை என்னவோ ஒரு ஆங்கில படத்தின் சாயலாக இருந்தாலும், அதை மேஷன் வாழ்க்கைக்கு பொருத்தி இருப்பது சூப்பர். சென்னையில் வேலைத்தேடி அலையும் இளைஞர்களுக்குள் இருவராக ராசுவும் மொக்கையும்.

மேன்ஷன் வாடகை, டீ கடை அக்கவுண்டு, மெஸ் பாக்கி இப்படி பல இடங்களில் கடன் வாங்கி இருக்கும் ராசுவுக்கும் மொக்கைக்கும் கடைசியாக ஒரு நாள் கெடு கொடுக்கப்படுகிறது. இருக்கிற கடுப்பில் சரக்கடித்துவிட்டு இதற்கெல்லாம் காரணம் கடவுள்தான் என்று கடவுளை திட்ட தொடங்கும் ராசுவும் மொக்கையும் 'நீ ஒரு அப்பாவுக்கு பிறந்திருந்தால் இறங்கிவா...' என்று கடவுளை அழைக்க, கடவுள் இவர்கள் குரலைக்கேட்டு வந்துவிடுகிறார். இதற்கு பிறகு இவர்கள் வாழ்க்கையில் என்னென்ன கலாட்டா நடக்கிறது என்பது தான் கதை...

கடவுளாக வரும் பிரகாஷ்ராஜ் மேஜிக் பாக்ஸ் என்ற பெயரில் அண்டதையே கைக்குள் வைத்திருப்பது பார்வைக்கு பிரம்மாண்டமாய் இருந்தாலும், சற்று சிந்தித்து பார்த்தால் வேடிக்கையே மிஞ்சுகிறது... இருந்தாலும் கடவுளுக்கு என்று தனி ஒரு உருவம் இல்லை என்று உணர்த்துவது அழகு. மேன்ஷனில் கடவுளே இல்லை என்று சொல்லும் ராஜேஷிடம் கடவுளைப் பற்றிய பிரகாஷ்ராஜ் விளக்கம் சொல்லி ஏஞஉ ஒந சஞ ரஐஊதஊ என்பதை ஏஞஉ ஒந சஞர ஐஊதஊ என்று மாற்றி வைப்பது புருவம் உயர்த்தும் ஆச்சரியம்.

பிரகாஷ்ராஜ் குளித்துவிட்டு வரும் காட்சியில், கடவுள் கூட சுடர்மணி ஜட்டி போட்டிருக்காரு... என்று கஞ்சா கருப்பு கமெண்ட் அடிப்பதிலும், காதிலிக்காக ரோஜாப் பூவை சந்தானம் வாடகைக்கு எடுப்பதிலும்... சிம்பு தேவனின் குசும்பு நன்றாகவே தெரிகிறது.

தான் ஆத்ராத்திரமா... மன்னிக்கவும் தான் ஆத்மார்த்தமா காதலித்த மதுமிதா ஒரு விபச்சாரி என்று தெரிந்ததும் சந்தானம் கண்ணீர் விடுவது டச்சிங் டச்சிங்...

பிரகாஷ்ராஜின் வசனங்கள் ஒவ்வொன்றும் அற்புதம், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல காமெடியிலும் கருத்துக்களைச் சேர்த்திருப்பது சபாஷ், பிரகாஷ்ராஜ் ஓவராக பேசி கருத்துக் கந்தசாமி ஆகாமல் இருந்தது ஆறுதல்.

பாடல்களைப் பொருத்தவரையில் சூப்பரோ சூப்பர்... பா.விஜய், நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட களத்தை தங்களின் தனித்தன்மையோடு காட்டி இருக்கிறார்கள். அதுவும் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய குறை ஒன்றும் இல்லை... பாடல் உருக்கமோ உருக்கம்.

கடவுள் நாத்திகர்களுக்கும்...