தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
'அண்ணன் டெண்டுல்கர், தம்பி டோனி...' போட்டி களத்தில் விஜய்

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதியப் போட்டியில் சென்னை அணியின் தூதராக உள்ள நடிகர் விஜய் கலந்து கொண்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின் ரசிகர்களிடையே பேசிய விஜய், இது அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கின்ற குடும்ப போட்டி. அண்ணன் சச்சின் இருக்கார். தம்பி டோனி இருக்கார்.

என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும் போட்டின்னு வந்துட்டா களத்தில் ஒரு கைப் பார்க்கணும். சென்னை அணி வெற்றிபெற, வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக வந்துள்ளேன். ரசிகர்கள் நம்ம அணிக்கு ஆதரவு தர வேண்டும். தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறிய விஜய், இந்தப் போட்டிக்கு மட்டும் அல்ல ஏழு போட்டிக்கும் நான் வருவேன் என்பதையும் தெரிவித்தார்.