தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
செக்ஸ் டார்ச்சர் உதயதாரா புகார்

'தீ நகர்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகை உதயதாரா. இவர் தொடர்ந்து பிரசன்னா உடன் கண்ணும் கண்ணும் படத்தில் நடித்துள்ளார். 'தீ நகர்' படம் தோல்வியைத் தழுவினாலும் இப்போது வெளிவந்திருக்கும் படம் நல்ல படம் என்ற பெயரை வாங்கி உள்ளது. தற்போதைக்கு படங்களில் நடிப்பதில்லை எனவும் படிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் நடிகை உதயதாரா பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் 'தீ நகர்' படத்தின் இயக்குநர் திருமலை தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு டார்ச்ர் செய்து வருவதாக நடிகை உதயதாரா புகார் தெரிவித்துள்ளார். போன் செய்வது, தன்னை பின் தொடர்வது என செக்ஸ் டார்ச்சர் தருகிறார் எனவும் இயக்குநர் திருமலை மீது நடிகை உதயதாரா புகார் தெரிவித்து வருகிறார்.