தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
கணவருக்காக மீண்டும் நடிக்க வந்தார் ஜோ..!

தன்னுடைய 'அகரம் பவுண்டேசன்ஸ்' சார்பில் இரண்டு அரசாங்க பள்ளிகளைத் தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார் சூர்யா. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த சூர்யா, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் யோசனைக் கேட்டிருக்கிறார் சூர்யா, பெண் கல்வியை முன்னிறுத்தும் வகையில் ஒரு குறும்படம் எடுக்கலாமே என்று அமைச்சர் ஐடியா கொடுக்க, இது பற்றிய யோசனையில் சூர்யா இருந்த போது, தானே முன்வந்து நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார் ஜோ! இப்படத்தை 'கண்ட நாள் முதல்' பிரியா இயக்கயிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு மேக்கப்பே போட கூடாது என்ற யோசனையில் இருந்து வந்த ஜோவின் மாற்றத்திற்கு சூர்யாவின் சமுதாய பணிகளே காரணம், தன் கணவரின் கனவுகளுக்காக தன்னை சமரசம் செய்துக் கொண்டுள்ளார் ஜோதிகா. முதலில் அஜீத் நடிப்பதாக பேசப்பட்டு இப்போது விஜய், மாதவன் போன்ற நடிகர்களும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்கள். சூர்யாவும் இதில் கண்டிப்பாக நடிப்பார் எனவும் தெரிகிறது.