|
|
|
சூர்யாவின் செய்திபடம், அஜீத் ஆர்வம்
தன்னுடைய அகரம் பவுண்டேஷன்ஸ் சார்பில் குழந்தைகள் கல்வியில் அதிகம் ஆர்வம்
காட்டி வரும் சூர்யா. சமீபத்தில் நட்சத்திரங்களை வைத்து கல்வி வளர்ச்சியில் ஈடுபடப்போவதாக
அறிவித்ததைத் தொடர்ந்து, பெண் கல்வியை முன்னிறுத்தும் வகையில் தன் மனைவி ஜோதிகவை
வைத்து ஒரு செய்திபடம் தயாரித்து வருகிறார் சூர்யா. இதில் சூர்யா உட்பட விஜய், மாதவன் போன்ற
தலைகளும் தலைக்காட்ட உள்ளனர், தல அஜீத்தும் இதில் நடிக்க ஆர்வம் கட்டி வருகிறார் எனவும்
சூர்யா தெரிவித்தார். தன் பட தேதிகளுக்கு ஏற்ப காட்சிகளை நடித்துத் தர உள்ளாராம் அஜீத்.
இயக்குநர் மணிரத்னம் தன் படக்குழுவைத் தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் தன்
கேமரா குழுவைத் தந்துள்ளார். இக் செய்திபடத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்,
கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தைக் 'கண்ட நாள் முதல்' பிரியா இயக்குகிறார்.
இப்படி பலரையும் ஒன்று திரட்டி இருக்கிறார் நடிகர் சூர்யா. |
|
|
|
|