|
|
|
ஸ்ரேயவுக்கு ஸ்நேகா அம்மாவா?
கே.எஸ்.ரவிக்குமார் கிடப்பில்போட்ட 'ஜக்குபாய்' படத்தை தூசுதட்டி எடுத்திருப்பதும்
அதில் சரத்குமார் நடிக்க இருப்பதும் தெரிந்த தகவல் தான். ஆனால் இப்படத்தில்
சரத்குமார் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்பது புது தகவல் தானே.
இதில் ஒரு ஹீரோவுக்கு ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார் எனவும் செய்திகள் கிடைத்துள்ளன.
இன்னொரு ஹீரோ, அதாவது அப்பா வேடத்தில் வரும் சரத்துக்கு ஸ்நேகா ஜோடியாக
நடிப்பார் எனவும் தெரிகிறது. ஏற்கெனவே ஹீரோவுக்கு அண்ணி, அத்தை வேடங்கள் வந்தும் அதை புறக்கணித்து வந்தார் சினேகா, நடித்தால் ஹீரோயின் தான் என்று சொல்லி வந்த சினேகா, இப்போதுஅறுவடை, பாண்டி, அச்சமுண்டு அச்சமுண்டு, சிலம்பாட்டம் என பல படங்கள் கைவசம் இருந்தும், ஸ்ரெயாவுக்கு அம்மாவாக நடிக்க சம்மதித்துள்ளார். அதற்கு
அந்த கேரக்டரோட முக்கியத்துவம் தான் காரணமாம்... |
|
|
|
|