தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
எஸ்.ஜே.சூர்யாவின் தொடரும் ஹீரோயிசம்

'வில்' படத்தில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் இனி நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருந்தார். இதற்கு வியாபாரி, திருமகன், என தொடர் தோல்விகளே முக்கிய காரணம். இப்போது தன் கொள்கையை மாற்றி அமைத்துள்ளார் சூர்யா. வின்சென்ட் செல்வாவின் உதவி இயக்குநர் சாய் செல்வா இயக்கும் 'நியூட்டனின் மூன்றாம் விதி' என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

இப்படத்தின் பூஜை ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. படம் மே மாதம் துவங்க இருக்கிறது. வில் படத்தை முடித்துவிட்டு படம் தயாரிக்கும் யோசனையில் இருந்து வந்த எஸ்.ஜே.சூர்யா, தொடர்ந்து நடிக்க இருப்பதால் தன்னுடைய பட தயாரிப்பை தள்ளி வைத்துள்ளார்.