தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
மேன்ஷன் வாழ்க்கையைப் படமாக்குகிறேன்... சிம்பு தேவன்

இம்சையரசன் 23 ஆம் புலிகேசி வெற்றிப் படத்திற்கு பிறகு இயக்குநர் சிம்பு தேவன் மீண்டும் ஷங்கரின் எஸ்.பிக்சர்சுக்கே தன் இரண்டாவது படத்தையும் இயக்கி வருகிறார். 'அரை எண் 305 தில் கடவுள்' என்ற வித்தியாசத் தலைப்பைக் கொண்ட இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகிவருகிறது. இதில் சென்னை டிரிப்லிகேனில் வசிக்கும் மேன்ஷன் வாசிகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதையை அமைத்திருப்பதாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சிம்பு தேவன்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, சந்தானம், கஞ்சா கருப்பு இருவரும் இப்படத்தில் அவரவர் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருக்கிறார்கள். இவர்களை தவிர பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள், ஜோதிர் மையி, கேன்டீன் நடத்தும் பெண்ணாகவும், மதுமிதா கல்லூரி மாணவியாக வருகிறார். நல்ல பொழுது போக்கு படமாக இது அமையும் என்றார் சிம்பு தேவன்.