|
|
|
சரத்துடன் ஜோடி சேரும் சினேகா
'ஜக்குபாய்' படத்தை தூசு தட்டி வைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.அரசியல் சமாச்சாரங்கள் அடங்கி உள்ளதால் ரஜினி 'ஜக்குபாய்' படத்தை கைவிட்டார். இப்போது சரத்குமார் அரசியலில் நுழைந்திருப்பதால் 'ஜக்குபாய்' படத்தில் சரத்குமாரை வைத்து இயக்க இருக்கிறார் என்பது தெரிந்த செய்திதான். ஆனால் இந்த படத்தில் சரத்துக்கு ஜோடியாக நடிக்க நம் சிரிப்பு சினேகா சம்மதம் தெரிவித்துள்ளார்.
மம்முடியுடன் அறுவடை, சிம்புவோடு சிலம்பாட்டம், லாரன்ஸுடன் பாண்டி, பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு, என படு பிசியாக இருந்து வரும் சினேகா 'குசேலன்' படத்தில் ரஜினிகாந்தோடு சில ரோமான்ஸ் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.
|
|
|
|
|