தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
விஜயகாந்த், மாதவன் படங்களை இயக்கும் செல்வா

கிட்டத்தட்ட 18 படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வா, இருந்தாலும் சமீபமாய் வந்த 'நான் அவன் இல்லை' ரீமெக் படத்தின் வெற்றியில் தான் வெளியே தெரிந்தார். பின் மீண்டும் 'தோட்ட' படத்தை இயக்கி ஓரளவு தன் வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டார். இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களை இயக்குகிறார் செல்வா.

விஜயகாந்த் நடிக்கும் ஆக்ஷன் படம் ஒன்றையும், மாதவன் நடிக்கும் செண்ட்டிமேன்ட் கலந்த காமெடி படம் ஒன்றையும் ஒரே சமயத்தில் இயக்க இருக்கிறார் செல்வா. ஸ்கிரிப்ட் சரியாக இல்லை என்றால் இந்த முயற்சி பெரும் ஆபத்தில் கொண்டு விட்டுவிடும் என்பதால் இப்போது ஸ்கிரிப்ட்டை சரியாக பிரிப்பேர் செய்து வருகிறார் செல்வா. (ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.......அடிப்பாறா?)