தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
'மன்னிப்பு கேட்க தயார்' ரஜினி

ஒக்கேனிக்கல் விவகாரதிற்காக திரை உலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார் ரஜினிகாந்த். இது பற்றி அவர் விளக்கம் அளித்த கன்னட தொலைக்காட்சியின் பேட்டியில், கன்னட மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. கன்னடர்களை எழிவாகவும் நான் பேசவில்லை. அப்படி பேசும் அளவிற்கு நான் முட்டாளும் இல்லை. அங்கே அரசியல் லாபம் அடைய முயற்சிப்பவர்களைத் தான் நான் கண்டித்தேன்.

நான் மன்னிப்பு கேட்காவிட்டால் நான் நடித்த படங்களை திரையிட விடமாட்டோம் என்று சிலர் கூறி வருகிறார்கள். இதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. என் கர்நாடக ரசிகர்கள் தான் ஏமாற்றம் அடைவார்கள். இதையும் மீறி நான் பேசியது தவறு என்று அங்கு இருக்கும் மூத்த நடிகர்கள் கூறினால் மன்னிப்பு கேட்க நான் தயார் என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார். ஆனால் அங்கு இருக்கும் கன்னட பெருந்தலைகள் சிலர் ரஜினி கன்னடர்களை இழிவு படுத்தும் வகையில் பேசி இருப்பதால் ரஜினி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.