தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரி டைவர்ஸ்

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கிய வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் தமிழில் அழகிய தீயே, நாம், மொழி, வெள்ளித்திரை ஆகிய படங்களை தயாரித்தவர். தற்போது அபியும் நானும், மயிலு ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். கர்நாடகத்தைச் சேர்ந்தவரான இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது, நடிகை டிஸ்கோ சாந்தியின் விட்டு மாடியில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, இவருக்கும் டிஸ்கோ சாந்தியின் தங்கையான லலிதாகுமாரிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பூஜா, மேக்னா என இரு குழந்தைகள் உள்ளன. பிரகாஷ்ராஜுக்கும், லலிதாகுமாரிக்கும் இடையே நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வருவாக செய்திகள் வெளியாகின. இந்நிûயில் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி சென்னை எழும்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, என் மனைவி லலிதாகுமாரிக்கும் எனக்கும் பிரச்னை. நான் அவரை டைவர்ஸ் பண்ணப்போறேன் என்பதெல்லாம் எங்களின் பர்சனல் மேட்டர். இருவரும் சேர்ந்தே எடுத்த முடிவு இது.

ஒரு நடிகனுடைய வாழ்க்கையில் கிசுகிசு வர்றது சகஜம்தான். இரண்டு படங்களில் ஒரு நடிகையுடன் தொடர்ந்து நடித்தால் போதும். உடனே ஓ இதுதான் காரணமான்னு பேச ஆரம்பித்துவிடறாங்க. வெள்ளித்திரை, மொழி படங்களில் டான்ஸ் மாஸ்டராக என்னோடு ஒர்க் பண்ணிய போனி வர்மா ஒரு நல்ல டெக்னீஷியன். என்னோட வெரிகுட் ஃப்ரெண்ட். நாங்க இயல்பா இருக்கிறது சிலருக்கு நெருக்கமா இருப்பதாகப்படுது. உடனே அவரை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு செய்தி பரவுது. ஒரு பெண்ணை எனக்கு அஸிஸ்டெண்டாக வைத்திரப்பது முழுக்க முழுக்க என் சொந்த விஷயம். இதற்கு ஏன் மீடியா இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்று தெரியவில்லை. நானும் என் மனைவியும் பிரிந்தாலும், ஒரே வீட்டில் நண்பர்களாக இருக்கலாம். இல்லை தனித்தனியாக வாழலாம். எப்படியிருந்தாலும் எங்கள் குழந்தைகள் பூஜா, மேக்னாவுக்கு அப்பா, அம்மா நாங்கள்தான் என்றார். எல்லோரது குடும்பத்திலும் நடப்பதுதான் எங்கள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. பிரிவு என்பது சகஜமான விஷயம். வாழ்கிற வாழ்க்கை சரியாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் கணவன், மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் பொய் சொல்லிக்கொண்டு வாழாதீர்கள் என்றார்.