|
|
|
'நாங்கள் பிரிய மாட்டோம்' பிரகாஷ்ராஜ் மனைவி நம்பிக்கை
பிரகாஷ்ராஜுக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து
வரை சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தன் மனைவி லலிதாக்
குமாரியை விவாகரத்து செய்து விட்டு நடன இயக்குநர் போனி வர்மாவை திருமணம் செய்து
கொள்ள இருக்கிறார் பிரகாஷ்ராஜ் என்றும் செய்திகள் கசிந்தன.
இதை உறுதிபடுத்தும் வகையில் பேட்டி அளித்த பிரகாஷ்ராஜும் 'நானும் என் மனைவியும்
பிரியப் போகிறோம். எல்லோரின் வாழ்க்கையிலும் நடந்தது எங்கள் வாழ்க்கையிலும்
நடந்திருக்கிறது, மற்றபடி இதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றார்'.
ஆனால் இப்போது அவர் மனைவி லலிதா குமாரி இதை மறுத்துள்ளார்.
பிரபல நடன அழகி டிஸ்கோ சாந்தியின் தங்கையும் பிரகாஷ்ராஜின் மனைவியுமான
லலிதாக் குமாரி கூறியதாவது 'நானும் என்
கணவரும் இதுவரையில் பிரியவில்லை. இனியும் நாங்கள் பிரிய மாட்டோம் என்று நம்பிக்கை
இருக்கிறது' என்றார். |
|
|
|
|