தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
அரை டஜன் படங்களுடன் பேரரசு..

பழனி படம் 100வது நாளை தொட்டிருப்பதால் வெற்றி விழாவைக் கொண்டாடும் உற்சாகத்தில் இருந்து வருகிறார் பேரரசு. அடுத்து கைவசம் ஆறு படங்களை வைத்துள்ளார் பேரரசு. முதலில் அர்ஜுன் நடிப்பில் 'அறந்தாங்கி' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் பரத் நடிக்கும் 'திருத்தணி' படத்தை இயக்க உள்ளார். தன்னுடைய சொந்த தயாரிப்பு என்பதனாலோ என்னவோ இந்தப் படத்திற்கு அவரே இசையமைக்க உள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு மேஜிக் மைண்ட் என்று பெயர் சூட்டி உள்ளார்.

இதாற்கு பிறகு ரவி தேஜா நடிக்கும் ஒரு தெலுங்கு படம், ஐயங்கரன் தயாரிக்கும் ஒரு தமிழ் படம். மேலும் இரண்டு தமிழ் படங்கள் என்று படு பிசியாக உள்ளார் பேரரசு. ஆனால் இப்போது முதல் கட்டமாக 'பழனி' படத்தின் வெற்றிவிழா நடக்க இருக்கிறது...