என்னை அவமானம் செய்துவிட்டனர், பார்த்திபன்
பெண் இயக்குநரான மதுமிதா இயக்கும் முதல் படம் 'வல்லமை தாராயோ'. சில மாதங்கள் முன்பு நடைப்பெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் முப்பெரும் தேவிகள் சிலை முன்பு குஷ்பு செருப்புடன் கால் மீது கால் போட்டு அமர்ந்ததற்காக சர்ச்சை ஏற்பட்டது.
இப்போது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் ஒரு பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது.
விழாவின் போது படத்தின் நாயகன் பார்த்திபன் வெளியூர் சென்றிருப்பதாக தெரிவிக்கப் பட்டது.
ஆனால் அவர் வெளியூர் செல்லவில்லை. 'வல்லமை தாராயோ' விழாவை புறக்கணித்து விட்டு
சென்னையில் தான் இருந்தார்.
இதுபற்றி பேசிய பார்த்திபன், முதலில் ஒரு பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிப்பதனால் மகிழ்ச்சியாக இருந்தேன்.
இயக்குநர் கௌதம் மேனனிடம் அவர் பணிப்புரிந்தவர் என்று எனக்கு அறிமுகமானார்.
ஆனால் அவர் கௌதம் மேனனிடம் பணிபுரியவில்லை என்பது பின்னர் எனக்கு தெரிந்தது.
மதுமிதாவிற்கு இயக்கிய அனுபவம் இல்லை என்பதை நான் படப்பிடிப்பின் போதுதான்
தெரிந்துக் கொண்டேன். என்னுடன் நடித்த சக நடிகர்களும் அதை புரிந்துக்கொண்டு அவரை கிண்டல் செய்தார்கள்.
நான் தான் அவர்களை தடுத்து படம் நல்ல முறையில் வளர்வதற்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
ஆனால் படத்தின் ஆரம்ப கட்டத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இறுதிக்கட்டத்தில் கொடுக்கப்படவில்லை. பாடல்கள்
வெளியீட்டு விழாவின் அழைப்பிதழில் என் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதனால் தான் விழாவிற்கு நான் வரவில்லை. இவ்வாறு
பார்த்திபன் தெரிவித்தார்.
இதைப்பற்றி படத்தின் தயாரிப்பாளர் திரிசக்தி சுந்தர் ராமன் தெரிவித்திருப்பதாவது, பார்த்திபன் திறமையான நடிகர் என்பதை நான் மறுக்க முடியாது, ஆனால் மதுமிதாவிற்கும் படம் இயக்கிய அனுபவம் இருக்கிறது என்பது உண்மை. கௌதம் மேனிடம் பச்சைக்கிளி முத்துச்சரம்
படத்தில் அவர் பணிபுரிந்தார், அதுமட்டும் இல்லாது நிறைய கும்பதங்களை இயக்கி இருக்கிறார் என்று
தெரிவித்தார்.