|
|
|
'மலைக்கோட்டை' வெற்றிவிழா
விஷாலின் வெற்றி வரிசையில் மிக முக்கியமான படம். விஷாலுக்கு 'புரட்சி தளபதி' என்ற பட்டத்தை
உறுதி செய்த படம் 'மலைக்கோட்டை'. விஷால் இன்னொரு விஜய்யாக விஷால் தரப்பு மேற்கொண்ட மாபெரும் முயற்சி
இந்த 'மலைக்கோட்டை' என்ற படம். பருத்திவீரன் படத்துக்கு பிறகு பிரியாமணி தாராளமாக
கவர்சிக்கு பச்சைக்கோடி கட்டிய படம். இப்படி பல பெருமைகள் 'மலைக்கோட்டை' படத்திற்கு
உள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், ஒரு கமர்ஷியல்
இயக்குநராக இயக்குநர் பூபதி பாண்டியன் தன் வெற்றியை மூன்றாவது முறையாக
தக்க வைத்துக் கொண்டார் என்பதே.
இப்படம் 175 நாட்கள் வெற்றிநடை போட்டுள்ளதால்
இதன் வெற்றிவிழா மே 1ஆம் தேதி காலை மியூசிக் அகாடெமியில் நடைபெறுகிறது. திரு.ராமனாராயணன் விழாவிற்கு தலைமை
வகிக்கிறார். திரு.ஏ.வி.எம்.சரவணன் முன்னிலை வகிக்கிறார். பாக்கியராஜ், பிரபு, பார்த்திபன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள
உள்ளனர். |
|
|
|
|