தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
ஆக்ஷன் விரும்பாத இளம் ஹீரோ

'தொட்டால் பூ மலரும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பி.வாசுவின் மகன் சக்தி. படம் ஓரளவு வெற்றியை தக்க வைத்ததால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் வந்தபடி உள்ளது. இப்போது கூல் புரோடக்ஷன்ஸ் சார்பில் ரவி இயக்கும் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்...' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முற்றிலும் காதல் படம் என்றும் தெரிகிறது. இப்போதெல்லாம் மூன்று படம் ஓரளவுக்கு வெற்றியடைந்துவிட்டால் தன் நான்காவது படத்திலேயே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு மசாலா படங்களில் இறங்கி விடுகிறார்கள் இளம் ஹீரோகள். ஆனால் சக்தியோ கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களையே தேர்வு செய்து வருகிறார். சொல்லப்போனால் இப்போது இவர் நடித்து வரும் படத்தில் வில்லனே கிடையாதாம். ( நல்ல விஷயம் தானே )