தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
கௌதம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

'காக்க காக்க' வெற்றிக்குப் பிறகே பேசப்பட்டு வந்த திரைப்படம் 'சென்னையில் ஒரு மழைக்காலம்'. ஆனால் கமல், சரத்குமார் என பெரிய தலைகளோடு படம் பண்ணி முடித்து, இப்போது முழு மூச்சோடு பணியாற்றி வரும் 'வாரணம் ஆயிரம்' படத்தின் கடைசி தருணத்தில் இருந்து வருகிறார் இயக்குநர் கௌதம் மேனன்.

இப்போது மீண்டும் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தின் ஸ்கிரிப்ட்டை தூசி தட்டி எடுத்திருக்கிறார் கௌதம். கௌதம் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் என்பது தெரிந்ததே. இவர்கள் கூட்டணி நிறைய வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளது. ஆனால் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்குமாறு கேட்டிருக்கிறார் கௌதம். ஹிந்தியில் பிசியாக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானும் இப்படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கௌதம் மேனன் தீவிர இளையராஜா இசை ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.