தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
'தசாவதாரம் இசை' தயார் நிலையில் கமல்

ஏப்ரல் 25ஆம் தேதி நடக்க இருக்கும் தசாவதார இசை வெளியீட்டிற்கு எல்லாம் தாயார் நிலையில் உள்ளது. ஜாக்கி ஜான் இங்கு வந்து விழாவில் பங்கேற்கும் செலவு மட்டும் சில கோடிகளை தொட்டுள்ளதாம். ஜாக்கி ஜான், அமிதாப் பச்சான், மமூட்டி என சூப்பர் ஸ்டார்கள் பங்குகொள்ளும் இவ்விழாவிற்கு தலைமை வகிக்கிறார் முதல்வர் கலைஞர்.

நேரு விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கும் இவ் விழாவில் படத்தில் நடிக்கும் அசின், நெப்போலியன், ஜெயப்பிரதா, மல்லிகா ஷெரவாத் இப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மற்றும் படத்தின் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.