தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
நடிகர்களுக்கு செக்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி. செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் தமிழ் படங்கள் ஓடும் தியேட்டர்களை தாக்கி கன்னட வெறியர்கள் அட்டூழியம் செய்கின்றர். தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம். இதில் அனைத்து நடிகர்களும் அவசியம் கலந்து கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

ரஜினி மற்றும் கர்நாடகத்தில் பிறந்த நடிகர்கள் உண்ணாவிரத்தில் பங்கேற்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலந்து கொள்ளாத நடிகர்களுக்கு திரையுலகம் எந்த ஒத்துழைப்பும் தராது என்று முடிவெடுத்துள்ளோம். அதன்படி நடப்போம் என்றார்.