 |
|
|
|
|
|
ஏ.வி.எம்.மின் 171 வது படம் 'அயன்
'
ஏ.வி.எம். நிறுவனம 171வது படமாக தயாரிக்கும் படம் 'அயன்'. இப்படத்தில் சூர்யா-தமன்னா ஜோடியாக நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழா ஏ.வி.எம். நிறுவனத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியபோது, 'அயன்' என்றால் நான்முகன் என்று பொருள். மேலும் வலிமை கொண்டவன், ஆற்றல் பொருந்தியவன் என்றும் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்காக 'சொன்னதை செய்து முடிப்பவன் நான் தொட்டதை விட்டதில்லையே சூரியனின் வெளிச்சத்தை துப்பாக்கியால் யாரும் சுட்டதில்லையே' என்று ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இது ஏ'வி'எம். நிறுவனத்துக்கும் சாலப்பொருந்தும். ஏ.வி.மெய்யப்பன் ஆரம்பித்த இந்த நிறுவனத்தை முனைப்புடன் இத்தனை ஆண்டுகளாக பராமரித்து வருவது பெரிய விஷயம். ஏ.வி.எம். பழைய விருட்சமாக இருந்தாலும் பூப்பதெல்லாம் புதிய பூக்கள்தான். ஏ.வி.எம். சரவணன், எம்.எஸ்.குகன் ஆகியோரை தொடர்ந்து எம்.எஸ்.குகனின் மகள்கள் அருணா குகன், அபர்ணா குகன் ஆகியோரும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். நான்காவது தலைமுறையாக தமிழ் சினிமாவில் ஏ.வி.எம். நிறுவனம் பங்காற்றுவது போற்றுதலுக்குரியது என்றார். |
|
|
|
|