|
|
|
மாவட்டந்தோறும் அரசாங்கம் ஆடியோ ரிலீஸ்
விஜயகாந்த் நடித்துள்ள அரசாங்கம் படத்தின் ஆடியோ வெளியீட்டை மாவட்டத் தலைநகரங்களில் ஒரே நேரத்தில் நடத்த விஜயகாந்த்தின் மைத்துனரும், அரசாங்கம் படத்தின் தயாரிப்பாளருமான சுதீஷ் திட்டமிட்டுள்ளாராம். விஜயகாந்த் நடித்துள்ள 150வது படம் அரசாங்கம் ரிலீசுக்கு தாயராக உள்ளது. அரசாங்கத்தை விஜயகாந்த் மட்டுமல்லாமல், அவரது கட்சியினரும், ரசிகர்களும் வெகுவாக எதிர்பாத்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியிடு மார்ச் 28ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வித்தியாசமாக சென்னையில் மட்டும் நடத்தாமல், தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒரே நேரத்தில் ஆடியோ வெளியீடு நடைபெறவுள்ளதாம். மாவட்டங்களில் தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். |
|
|
|
|