தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

இயக்குனர் ஜீவா கனவு காணாத இயக்குனர்!

தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத ஒரு இடத்தை பிடித்த ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, சிறந்த இயக்குனரும் கூட. உன்னாலே..உன்னாலே மூலம் வித்தியாசமான ஒரு கலைஞனாக பதிவானவர் ஜீவா. கடைசியாக தாம்தூம்! ஜீவாவின் திரைப்பணியில் உதவியாக இருந்த அவர் மனைவி அனீஸ் தன்வீர் இப்போது தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார். விஷன் ஜீவா ஸ்டுடியோ என்ற பெயரில் அவர் துவக்கியுள்ள கம்பெனி சார்பில் எடுக்கப்படும் முதல் படம் 'முத்திரை'. ஜீவாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீநாத் தான் முத்திரையின் இயக்குனர். ஜீவாவின் படங்கள் எல்லாவற்றுக்கும் உடையலங்காரம் மட்டுமே செய்து வந்த அவர் மனைவி அனீஸ் முதல் முறையாக தயாரிப்பு பணியோடு சேர்ந்து கதை திரைக்கதை எழுதும் பணியிலும் இறங்கியிருக்கிறார். படத்தின் துவக்க விழாவுக்கு ஜீவா மீது அபிமானம் கொண்ட திரையுலக நண்பர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர். மென்மையான மாலை வெயிலையும், உண்மையான உணர்வுகளையும், மகிழ்ச்சியாக கலந்து திரைப்படமாக்கும் திறமை ஜீவாவுக்கே உரித்தானது. அவர் பெயரை தொடர்ந்து ரசிகர்கள் நெஞ்சில் நிறுத்தும் பணியை விஷன் ஜீவா ஸ்டுடியோ மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் அனீஸ்!