அமீருக்கு பாராட்டு விழா
அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' படம் பெர்லின் திரைப்பட விழா வரை சென்று தமிழ் சினிமாவிற்கு
பெருமை சேர்த்தது. இதற்கு தமிழக முதல்வர் மற்றும் திரை உலக முக்கிய புள்ளிகள் அனைவரும்
அமீருக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆனால் தமிழ் திரை உலகம் அமீருக்கு எந்த
வகையிலும் பாராட்டுகளை தெரிவிக்கவில்லை. இதை பற்றி அமீர்ரும் கூறி வருத்தப்பட்டார்.
இப்போது அமீரை அங்கீகரிக்கும் வகையில் சினிமா பத்திரிக்கை யாளர் சங்கம் பாராட்டு
விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.