|
|
|
அஜீத் ஜோடியாக சமீரா
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜீத் ஜோடியாக சமீரா ரெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இதைத்தொடர்ந்து ஒரு சில இந்தி படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சிவாஜி புரொடக்ஷன்ஸ் தற்போது மீண்டும் தமிழ் பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. தற்போது ராஜுசுந்தரம் இயக்கத்தில் ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 'ஏகன்' படத்தை தொடர்ந்து அஜீத் இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது கவுதம் மேனன இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க உள்ளதாக தெரிகிறது. |
|
|
|
|