|
|
|
நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை
நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரை உலக சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும்
உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் திரை உலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும்
கலந்து கொண்ட நிலையில், நடிகர்கள் கார்த்திக், நெப்போலியன், ஆர்யா இயக்குநர்கள்
பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மணிவண்ணன், ஷங்கர், தங்கர்பச்சான், லிங்குசாமி
இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற தமிழ் திரை உலகின்
முக்கிய புள்ளிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. நடிகைகள் சுகாசினி, ரேவதி,
அசின், ரீமாசென், நிலா, நவ்யா நாயர் போன்றவர்களும் இதில் மிஸ்ஸிங்க்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்க இயலாதவர்கள் அதற்கான காரணத்தை அவர்கள் சார்ந்த அமைப்பிடம்
தொலைபேசி மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவிக்குமாறு தயாரிப்பாளர் சங்க தலைவர்
திரு. ராமநாராயணன் கூறி உள்ளார். இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க
வேண்டிய அவசியம் இருக்காது, அப்படி அவர்கள் காரணத்தை தெரிவிக்க மறுத்தால்
அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அமைப்புகள் கூடி ஆலோசிப்போம் மேலும் அவர் கூறினார் . |
|
|
|
|